உள்ளடக்கத்துக்குச் செல்

காவன்தீசனின் பத்துத் தளபதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேரபுத்தபாய

[தொகு]

"ரோஹணா" என்னும் பெயருள்ள ஒருவன் கோதமலைக்கருகில் உள்ள "கிட்டி" என்னும் கிராமத்தின் தலைவனாக இருந்தான். இவன் தனக்கு பிறந்த பிள்ளைக்கு "கோதாபயன்" என்று பெயரிட்டான்.

தேரபுத்திர அபயன்

பிள்ளைபருவம்

[தொகு]

ஒரு பத்து 12 வயதாகும் போது மிகுந்த பலம் பெற்றவனாயிருந்தான். விளையாடும்போது நாலைந்து பேர் சேர்ந்து கூட தூக்கமுடியாத கற்களையும் அனாவசியமாக தூக்கி எறியும் பலம் பெற்றவனாயிருந்தான்.

அவனுடைய தந்தை அவனுக்கு 16 வயதானபோது , 38 அங்குல சுற்றளவும் 16 முழ நீளமும் உள்ள கதாயுதமொன்றை செய்து கொடுத்தார். இதைக்கொண்டு பெரிய பனைமரங்களை தென்னை மரங்களையும் அடித்து வீழ்த்துவான். இதனால் இவன் பெரும் வீரன் என புகழ்பெற்றான்.

பெயரின் காரணம்

[தொகு]

"ரோஹணா", கோதாபயனுடைய தந்தை "மகாசும்ம" தேரருடைய ஆதரவாளனாயிருந்தான். ஒருமுறை கோத்தபர்வத விகாரையில் மகாசும்ம தேரருடைய உபதேசத்தை கேட்டபோது முதல் நிலையான "சோடபதி(விமோசம் பெறுதல்)" நிலையை பெற்றான். அதன் பிற்பாடு மனம் நெகிழ்ந்தவனாக குடும்பத்தலைமையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு மஹாஹம்ம தேரரிடம் தீட்சை பெற்றான்.

அதன் பிற்பாடு தியானப்பயிற்சி மூலம் "அரஹந்தர்" ஆவதற்கு தன்னை தகுதியுடையவனாக்கிக்கொண்டான். இதன்மூலம் "தேரரின் புத்திரன்" எனும் அர்த்தத்தில் "தேரபுத்திரபயன்" என அழைக்கப்பட்டான்.

கோதாயிம்பர

[தொகு]

கோதாயிம்பர என்பவன் இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான். இவன் கிரி என்னும் பிரதேசத்தில் நினெமொல்பிட்டிய என்னும் இடத்தில் பிறந்தான். இவன் ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவான். உருவத்தில் சிறியவனாக இருந்ததால் கோதாய (சிங்கள அர்த்தம்) என்னும் பெயரால் அழைக்கப்பட்டான். இவன் ஒரு சோம்பேறியாவான். ஒரு நாள் சகோதரர்கள் வயலின் ஒரு பகுதியை தவிர மீதிப் பகுதியை சுத்தம் செய்துவிட்டு மீதியை இவனிடம் கொடுத்தனர். இவன் மிக விரைவில் துப்பரவாக்கினான். இதனால் காவன்தீசன் இவனைத் தன் படையில் சேர்த்துக் கொண்டான்.

தேவநந்தராமய என்னும் ஸ்தூபி

[தொகு]

போரில் காமினி வெற்றியடைந்தால் ஒரு ஸ்தூபி நிலைநாட்டப்படவேண்டும் என்று ஒருமுறை சபதம் மேற்கொண்டான். காமினி போரில் வெற்றிபெற்றதும் "தேவநந்தராமய" என்னும் விகாரையை கட்டினான்.